மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
திரைப்படங்களில் நடிப்பதை தள்ளி வைத்துவிட்டு சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்த நடிகை லக்ஷ்மி மஞ்சு தற்போது மீண்டும் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இயக்குனர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு “லக்ஷ்மி பாம்” என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் பூஜை நேற்று(மே 20) ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்னா ஸ்டுடியோவில் நடைபெற்றது. திரில்லர் காமெடியான இப்படத்தில் நீதிபதியாக லக்ஷ்மி மஞ்சு நடிக்கவுள்ளார். அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. முதற்கட்ட படப்பிடிப்பிலேயே படத்தை முடிவுக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. மௌனிகா சந்திரசேகர் மற்றும் உமா லக்ஷ்மியின் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுனில் கஷ்யப் இசையமைக்கின்றார்.