மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஆகடு, ப்ரூஸ் லீ என இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலாவின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியைத் தழுவியதால், பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வருண் தேஜ் நாயகனாக நடிக்கும் மிஸ்டர் படத்தை இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கவுள்ளார் என அறிவிப்பு வெளிவந்து அப்படத்தின் பூஜையும் நடந்தேறியது. மே 15ல் துவங்கும் என கூறப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மே20 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால் இன்னும் மிஸ்டர் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கப்படவில்லை. இந்நிலையில் மிஸ்டர் படத்திலிருந்து இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மிஸ்டர் படத்தின் இராண்டாம் பாதி திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்யுமாறும் வருண் தேஜ் ஸ்ரீனு வைட்டாலவிடம் கூறியுள்ளார்.அதன் பின்னர் வைட்டாலா செய்த மாற்றங்களும் வருண் தேஜிற்கு பிடிக்கவில்லையாம். இதனால் ஸ்ரீனு வைட்டாலாவை இப்படத்திலிருந்து தயாரிப்பாளர்கள் நீக்கி விட்டு இயக்குனர் சேகர் கம்முல்லாவை அமர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.