‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
டோலிவுட்டின் யங் சூப்பர் மகேஷ் பாபு நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கியுள்ள பிரம்மோற்சவம் மே 20ல் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ள மகேஷ் பாபு உள்ளிட்ட படக்குழு பிரமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர். மேலும் இப்படத்தை தணிக்கை குழுவிற்கு திரையிட இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா ஏற்பாடு செய்துள்ளார். திங்கள்கிழமை பிரம்மோற்சவம் படத்தின் தணிக்கை முடிவுகள் தெரிய வரும் என தகவல்கள் கூறுகின்றன. பிவிபி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது. சமந்தா, காஜல் அகர்வால்,பிரணிதா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.