ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்கவந்ததை தொடர்ந்து, மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபியின் மகன் கோகுலும் கதாநாயகனாக அறிமுகமாகும் வேலைகள் கடந்த வருடமே ஆரம்பிக்கப்பட்டன. நேற்று இந்தப்படம் ரிலீஸாகி ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் பெயர் முதுகாவ்.. இந்தப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார் நிரஞ்சனா. லவ் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் விபின் தாஸ் என்பவர் இயக்கியுள்ளார்.
படத்தை நடிகர் விஜய்பாபுவும் சான்ட்ரா தாமஸும் இணைந்து தயாரித்திரு'க்கின்றனர். விஜய்யின் 'தெறி'யை கேரளாவில் வெளியிட்டவர்கள் இவர்கள் தான்.. நேற்று படத்தை பார்க்கவந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஷாக்கிங் கொடுத்தார் துல்கர் சல்மான்.. ஆம்.. இந்தப்படத்தின் ஆரம்பம் மற்றும் இறுதிக்காட்சியில் துல்கர் சல்மான் குரல் தான் கதையை நகர்த்தி கிளைமாக்ஸில் படத்தை முடிவுக்கும் கொண்டுவருகிறது. சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷும் துல்கர் சல்மானும் நண்பர்கள் என்பதால் அவருக்காக வாய்ஸ் கொடுக்க தயாரிப்பாளர்கள் கேட்டபோது உடனே ஒகே சொல்லிவிட்டாராம் துல்கர் சல்மான்.