நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் |
மம்முட்டி நடித்த 'புதிய நியமம்' படம் கடந்த பிப்ரவரியில் வெளியாக, அவரது இன்னொரு படமான 'ஒயிட்' ரிலீசுக்கு தோதான தேதி கிடைக்காமல் தடுமாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த கவலைகள எதையும் மனதில் ஏற்றிக்கொள்ளாமல், தனது ஷெட்யூல்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் மம்முட்டி. அந்தவகையில் சமீபத்தில்தான், நிதின் ரெஞ்சி பணிக்கர் டைரக்சனில் அதிரடி போலீஸ் அதிகாரியாக தான் நடிக்கும் 'கசாபா' படத்தின் படப்பிடிப்பை முடித்தார்.. இதோ இப்போது அடுத்து 'தோப்பில் ஜோப்பன்' என்கிற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.
சசிகுமாரை மலையாளத்துக்கு அழைத்துசென்று 'மாஸ்டர்ஸ்' படத்தை இயக்கிய ஜானி ஆண்டனி தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.. அதுமட்டுமல்ல, இது மம்முட்டியும் ஜானி ஆண்டனியும் இணையும் ஐந்தாவது படமும் கூட.. இந்தப்படத்தில் ஒரு கபடி வீரராக 'தோப்ரபுரம் கபடிக்குழு' என்கிற கிராமத்து கபடிக்குழுவின் லீடராக நடிக்கிறார் மம்முட்டி. படத்தில் கபடி ஆட்டம் கிளைமாக்ஸில் பிரதான இடத்தை பிடிக்கிறதாம். தற்போது ஆரம்பத்தில் மம்முட்டி கபடி போட்டியில் கலந்துகொண்டு விளையாடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.