‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டமாக மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'சார்லி' திரைப்படம் வெளியானது.. ரசிகர்களிடம் இந்தப்படத்திற்கு கிடைத்த அபாரமான வரவேற்பால் நேற்று வெற்றிகரமாக 50வது நாளை தொட்டுள்ளது., படத்தில் நடித்த துல்கரின் 'சார்லி' கதாபாத்திரம். எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்வதையே வாழ்க்கையாக கொண்ட ஒன்றாக வெகு அழகாக வடிவமைக்கபட்டு இருந்தது. துல்கரின் ஜோடியாக 'டெஸா' என்கிற இன்னொரு சிறப்பான கேரக்டரில் நடித்திருந்தார் பார்வதி, மற்றொரு கதாநாயகியாக அபர்ணா கோபிநாத் நடித்திருந்தார்.
துல்கரை வைத்து ஏற்கனவே 'ஏபிசிடி' படத்தை இயக்கிய மார்ட்டின் பரக்கத் தான் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார்.. இந்த ஐம்பது நாட்களில் 'சார்லி' கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.. சூப்பர்ஹிட் என்கிற அதிரடி வகையில் சேராமல், ஸ்லீப்பர்ஹிட் என்கிற அமைதியான வெற்றியைத்தான் 'சார்லி' ருசித்திருக்கிறது. மறைந்த நடிகை கல்பனா கடைசியாக நடித்து வெளியானது இந்தப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.