ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
மலையாளத்தில் இருந்து ஹிட் படங்களை தமிழுக்கு ஏற்றமாதிரி ரீமேக் செய்துவருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மலையாளத்தில் உள்ள கலாச்சார சூழலுக்கும் நம்ம ஊர் நிலவரத்துக்கும் ஏற்றமாதிரி ஒருசில படங்கள் மட்டுமே ரீமேக்கிற்கு செட்டாகும். மற்றபடி படம் சூப்பராக இருக்கிறதே என ரீமேக் பண்ணினால் ரிசல்ட் பூஜயமான நிகழ்வுகள் பல உண்டு.. 'பாபநாசம்', '36 வயதினிலே' ஆகிய படங்கள் ஹிட்டனதற்கு காரணம் அது எந்த மொழி மக்களுக்கும் பொருந்துகின்ற கதை.. அதனால் ரீமேக்கிலும் வெற்றியை சுவைத்தன.
தற்போது 'பெங்களூர் டேய்ஸ்' ரீமேக்காக உருவாகியுள்ள 'பெங்களூர் நாட்கள்' படத்திற்கான வரவேற்பு கூட மதில் மேல் பூனையாகத்தான் இருக்கிறது.. பாஸ்கர் தான் இயக்குனர் என நம்பிக்கை வைத்தாலும், ஒரிஜினலில் நடித்த நடிகர்களின் வசீகரத்தை இந்த ரீமேக்கில் அப்படியே கொண்டு வரமுடியுமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வருடம் மலையாளத்தில் வெற்றிபெற்ற 'பிரேமம்' படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக நீண்ட நாட்களாக பேச்சு ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஆனால் கிட்டத்தட்ட சென்னையிலேயே 230 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கும் இந்தப்படத்தை பார்த்த பெரும்பாலான தமிழ் ரசிகர்கள் ஏகோபித்த குரலில் சொல்வது தயவுசெய்து 'பிரேமம்' படத்தை ரீமேக் பண்ணாதீர்கள் என்பதுதான். காரணம் அந்தப்படத்தின் கதைக்களமும் அதன் ரீமேக்கில் நடிப்பதற்கான நடிகர்கள் தேர்வும் படத்தின் அழகியலை சிதைத்து விடும் என்பது அவர்கள் கருத்தாக இருக்கிறது. ஆனால் எதுவும் நம் கையில் இல்லையே..