ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
டோலிவுட்டின் பிரபல இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் உருவாகும் பிரம்மோற்சவம் படத்தில் மகேஷ் பாபு நடித்து வருகின்றார். நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், பிரணித்தா என மூன்று நாயகிகள் இப்படத்தில் நடிக்கின்றனர். ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் என்பதால் பிரம்மோற்சவம் படத்தின் கதையில் பல கமர்சியல் விஷயங்களை சேர்க்கக் கோரி மகேஷ் பாபு இயக்குனரிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுவரை இப்படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்து திருப்தி அடையாத மகேஷ் பாபு ஸ்ரீகாந்த்திடம் அவற்றை திருத்துமாறும் கூறியுள்ளார். பிரம்மோற்சவம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகின்றது. பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்து வருகின்றார். 2016 ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.