மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடந்த மார்ச்-27ஆம் தேதி மோகன்லாலுடன், மஞ்சு வாரியர் இணைந்து நடித்த 'என்னும் எப்பொழும்' படம் வெளியானது. அதே நேரத்தில் அவரது முன்னாள் கணவர் திலீப் நடித்த 'இவன் மரியாதராமன்' படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், ஒரு சிலர் மீண்டும் மஞ்சுவையும் திலீப்பையும் மோத வைக்க நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு ஒரு வாரம் கழித்து தான் தனது படத்தை ரிலீஸ் செய்தார் திலீப்.
இப்போது திலீப்பின் விவாகரத்துக்கு காரணமானவர் என அரசல் புரசலாக கிசுகிசுக்கப்படும் காவ்யா மாதவன், திலீப்புடன் மோதவுள்ளார். ஆம்.. வரும் மே-1ஆம் தேதி திலீப் நடித்துள்ள 'சந்திரேட்டன் இவிடயே' படமும், காவ்யா மாதவன் நடித்துள்ள 'ஷி டாக்ஸி' படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. இவன் மரியாதராமன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து திலீப் இன்னொரு வெற்றிக்காக மே-1ல் குதிக்கும் வேளையில், காவ்யா மாதவனோ தனக்கு நல்லதொரு ரீ என்ட்ரிக்காக அதே தேதியில் தியேட்டருக்கு வருகிறார்.