நட்பா, துரோகமா ? - அழுத்தமாக மிரட்டும் 'கருடன்' டிரைலர் | முதன் முறையாக தேர்தலில் ஓட்டளித்த அக்ஷய்குமார் | சின்னத்திரைக்கு வந்தார் வடிவேலு | கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் நடிகரின் படம் | நான் இறந்த பிறகும் என் பேர் சொல்லும் படம் : கருணாஸ் நெகிழ்ச்சி | ஓட்டளித்த கர்ப்பிணி தீபிகா படுகோனே | சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூரூ போதை பார்ட்டி | சென்னை ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையம் : இளையராஜாவுடன் இணைந்து தொடக்கம் | ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் |
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் இஸ்மத் பானு. அசுரன், அயோத்தி, நவம்பர் ஸ்டோரி, பொம்மை நாயகி படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்தவர் தற்போது 'வெப்பம் குளிர் மழை' படத்தின் மூலம் கதை நாயகி ஆகியிருக்கிறார். பாஸ்கல் வேதமுத்து இயக்குகிறார். எம்.எஸ்.பாஸ்கர், ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷங்கர் இசை அமைக்கிறார், பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் முதல் பார்வையை இயக்குனர் வெற்றி மாறன் வெளியிட்டார்.
படம் பற்றி இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து கூறியதாவது: சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் படங்கள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன. அந்த வகையில் 'வெப்பம் குளிர் மழை' ஒவ்வொரு பார்வையாளரிடமும் வலுவான உணர்ச்சிகளைத் தூண்டும் அத்தகைய சிக்கலை ஆராய்கிறது. திருமணமான தம்பதிகள் சந்திக்கும் இன்றைய சவால்களை மையமாகக் கொண்டது. அதில் உருவாகும் சமூக தாக்கங்கள் மன, உடல் ரீதியாக உறுதியற்ற தன்மைகளை எப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உருவாக்குகின்றன என்பதை படம் பேசுகிறது. என்றார்.