நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் |
நடிகர் அஜித்திற்கு மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்.
தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் அஜித், 52. இவர், மகிழ் திருமேனி இயக்கத்தில், 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு, அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில், உடல்நிலை பாதிப்பு காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருதினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.
அவரது காதுக்கு அருகே மூளைக்கு செல்லும் நரம்பில் சிறிய வீக்கம் கண்டறியப்பட்டது. இந்த வீக்கம் அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு ஒருநாள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அஜித் இன்று(மார்ச் 9) அதிகாலை வீடு திரும்பினார்.
அறுவை சிகிச்சைக்கு பின், நடிகர் அஜித் நலமுடன் இருப்பதாகவும் வரும் 15ம் தேதி, 'விடாமுயற்சி' படப்பிடிப்பிற்காக, 'அஜர்பைஜான்' நாட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.