கல்கி 2898 ஏடி, இந்தியன் 2 - அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்டங்கள் ரிலீஸ் | நட்பா, துரோகமா ? - அழுத்தமாக மிரட்டும் 'கருடன்' டிரைலர் | முதன் முறையாக தேர்தலில் ஓட்டளித்த அக்ஷய்குமார் | சின்னத்திரைக்கு வந்தார் வடிவேலு | கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் நடிகரின் படம் | நான் இறந்த பிறகும் என் பேர் சொல்லும் படம் : கருணாஸ் நெகிழ்ச்சி | ஓட்டளித்த கர்ப்பிணி தீபிகா படுகோனே | சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூரூ போதை பார்ட்டி | சென்னை ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையம் : இளையராஜாவுடன் இணைந்து தொடக்கம் | ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் |
விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். வரும் அக்., 19ல் படம் ரிலீஸாக உள்ளது. தற்போது ரிலீஸ் தொடர்பான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாய் நடக்கின்றன. அதேசமயம் படம் வெளியீடு தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையேயான பங்கு தொடர்பான பிரச்னையால் முக்கிய தியேட்டர்களில் படம் ரிலீஸாவதில் சிக்கில் நீடிக்கிறது.
இதற்கிடையே லியோ படம் வெற்றி பெற வேண்டி கோயில் கோயிலாக சென்று வருகிறார் லோகேஷ் கனகராஜ். சில தினங்களுக்கு முன்னர் லோகேஷ், இயக்குனர் ரத்னகுமார் உள்ளிட்ட அவரது குழுவினர் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டு வந்தனர். தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் சென்று வந்துள்ளனர் லோகேஷ், ரத்னகுமார். அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு, கோயிலுக்கு உள்ளே உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய லோகேஷ், பின்னர் ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மாளை தரிசனம் செய்தார். இதுதொடர்பான போட்டோக்கள் வைரலாகின.