ஜிம்மில் ராஷ்மிகா காயம் : படப்பிடிப்பு தள்ளிவைப்பு | என்னை முதன்முறையாக அறைந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் ; வெங்கடேஷ் தகவல் | கேம் சேஞ்சர் படத்தில் நானா ஹைரானா பாடல் இடம்பெறாதது ஏன்? | மதுரை பெண் போல் நடிக்க ஆசை - மிருணாளி ரவி | சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது ஆந்திர உயர்நீதிமன்றம் | துபாய் கார் ரேஸில் இருந்து விலகினார் அஜித் | இட்லி கடை படம் எமோஷனலாக இருக்கும் - நித்யா மேனன் | 7 ஆண்டுகளுக்கு பின் த்ரி விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் அனிரூத் | குடும்பஸ்தன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ராஜூ முருகன், சசிகுமார் பட படப்பிடிப்பு நிறைவு |
முன்னணி பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தமிழில் 'விவேகம்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களுக்கு வீடுகட்டி கொடுத்தார். விவேக் ஓபராய் நடிப்பதோடு அவ்வப்போது படத் தயாரிப்பிலும் ஈடுபடுவார். அதன்படி பாலிவுட் தயாரிப்பாளர் சாஹோடன் இணைந்து படங்களை தயாரித்து வந்தார்.
இந்த நிலையில் படத் தயாரிப்புக்காக தான் கொடுக்கும் பணத்தை நகைகள், மற்றும் இடங்கள் வாங்குவதில் சாஹோவும், அவரது மனைவி ராதிகா நந்தாவும் ஈடுபட்டு வந்துள்ளது விவேக் ஓபராய்க்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து விவேக் ஓபராய் மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். தான் கொடுத்த பணத்தில் ஒரு கோடியே 50 லட்சம் வரை சாஹோ கையாடல் செய்திருப்பதாகவும், அதனால் அவர்மீது கடும் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் மோடிச வழக்கு பதிவு செய்த போலீசார், சாஹோவை கைது செய்தனர். தலைமறைவான சாஹோவின் மனைவியை தேடி வருகிறார்கள்.