ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
சின்னத்திரையில் ஜோடியாக நடித்து நிஜத்திலும் ஜோடியாக இணைந்த பிரபலங்களில் சித்துவும், ஸ்ரேயா அஞ்சனும் பிரபலமானவர்கள். கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் தொடரில் ஜோடியாக நடித்திருந்தனர். அந்த சேனலில் ஒளிபரப்பான சீரியல்களிலேயே அதிக ரசிகர்களை கொண்டது திருமணம் சீரியல். மேலும், அந்த சேனலில் நடித்த நடிகர்களிலேயே அதிக அளவு பிரபலமானதும் சித்து - ஸ்ரேயா ஜோடி தான். டிஆர்பி டாப் பட்டியலில் இடம் பிடித்த சீரியல் நடிகர்களுக்கு இணையாக இவர்களும் பிரபலமடைந்தனர். அதற்கு காரணம் இவர்களுக்கிடையே இருந்த கெமிஸ்ட்ரி தான்.
தற்போது இருவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், சித்து - ஸ்ரேயா ஜோடிக்கு ரசிகர் பக்கங்கள் அதிகமாக ஓப்பனாகி இருவர் நடித்து வரும் ப்ராஜெக்ட் மற்றும் அவர்களை பற்றிய மற்ற சுவாரசிய தகவல்களை பகிர்ந்து வருகின்றன. அந்த வகையில், சித்துவும் ஸ்ரேயாவும் பள்ளிப்படிக்கும் போது எடுத்துகொண்ட புகைப்படத்தை தேடிப்பிடித்து நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் சித்து - ஸ்ரேயா ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.