ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து எலிமினேஷனே ஆகாமல் தாமாகவே போட்டியிலிருந்து விலகினார். ஆனல், அவர் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் 5, 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து வெற்றிகரமாக சென்று கொண்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே நமீதா மாரிமுத்து திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கான காரணங்களை ரசிகர்களிடம் இதுவரை யாரும் தெளிவாக தெரிவிக்கவில்லை. நமீதா மாரிமுத்து தமிழ் பிக்பாஸில் கலந்து கொள்ளும் முதல் திருநங்கை என்பதாலும் படங்கள், மாடலிங் துறையின் மூலம் ஏற்கனவே நல்ல பிரபலம் அடைந்தவர் என்பதாலும் அவர் மீதான எதிர்பார்ப்பு மக்களுக்கு அதிகமாக இருந்தது. அவர் எந்த வித காரணமும் இல்லாமல் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது பலருக்கும் வருத்தத்தை தந்தது. உடல்நல பிரச்னையால் அவர் விலகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நமீதா மாரிமுத்து விரைவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் தெரிய வந்துள்ளது. அதன்படி, நமீதா பிக்பாஸ் வீட்டிலிருந்து மட்டுமே வெளியேறினார். போட்டியிலிருந்து வெளியேறவில்லை. அவருக்கு தற்போது சிகிச்சை நடைபெற்று வருகிறது. விரைவில் நலம் பெற்று போட்டியாளராக மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைவார் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் நமீதாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டில் பார்ப்பதற்கு ஆர்வமாக காத்திருக்கின்றனர்.