மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மோகன்லால் நடிப்பில் புலி முருகனுக்கு இணையான, இல்லையில்லை அதைவிட புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் 'ஒடியன்'. விளம்பரப்பட இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள இந்தப்படம் வரும் டிச-14ஆம் தேதி உலகமெங்கும் சுமார் 3௦௦௦ திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது.
அதுமட்டுமல்ல மலையாளம், தெலுங்கு தமிழ் என மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகவுள்ள இந்தப்படம் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாக இருக்கிறது. மேலும் இதுவரை மோகன்லால் படங்கள் வழக்கமாக ரிலீஸாகி வந்த நாடுகள் தவிர போலந்து, நியூசிலாந்து உள்ளிட்ட இன்னும் சில நாடுகளையும் சேர்த்து மொத்தம் 31 நாடுகளில் 'ஒடியன்' ரிலீஸாக இருக்கிறது.