‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமகால சமூக கதைகளையே படமாக இயக்கி வந்த இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், முதன்முறையாக வரலாற்று படமாக காயம்குளம் கொச்சுன்னி என்கிற படத்தை இயக்கி வருகிறார். இது கேரளாவில் பல ஆண்டுகளுக்கு முன் பிரசித்தி பெற்ற கொள்ளையன் ஒருவனின் கதை.
இதில் கொள்ளையன் கேரக்டரில் நிவின்பாலியும் அவரது குருவாக மோகன்லால் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்தப்படத்தின் டப்பிங்கின்போது இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், மோகன்லாலுடன் உரையாடிய ஆடியோ ஒன்று சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதில் கொள்ளையன் காயம்குளம் கொச்சுன்னி பற்றிய இரண்டு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது காயம்குளம் கொச்சுன்னியை இதுநாள் வரை அனைவரும் இந்து என்றே எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவன் ஒரு முஸ்லீம். அதேசமயம் அவன், கோழிக்கோட்டை சேர்ந்தவன் அல்ல.. பத்தினம்திட்டாவை சேர்ந்தவன்.. இதுதவிர கேரளாவில் உள்ள கோவில்களில் ஒன்றில் உள்ள இடம்பெற்றுள்ள மூர்த்திகளில் ஒன்றாக காயம்குளம் கொச்சுன்னியும் இடம் பெற்றுள்ளானாம்.