‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மோகன்லால் - பிரியதர்ஷன் நட்புக் கூட்டணி கடந்த 3௦ வருடங்களுக்கு மேலாக சீரும் சிறப்புமாக தொடர்கிறது. கடந்த வருடம் இவர்கள் கூட்டணியில் 'ஒப்பம்' என்கிற படம் வெளியானது.. கண்பார்வை தெரியாதவராக மோகன்லால் நடித்திருந்தாலும் கூட, அந்தக்குறையை அவர் மட்டுமல்ல, படம் பார்க்கும் ரசிகனும் உணராத வகையில் பக்கா கமர்ஷியலாக ஆக்சன் த்ரில்லராக இந்தப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் பிரியதர்ஷன்.. இந்தப்படம் மோகன்லாலுக்கு மட்டுமல்ல, நீண்ட நாட்களாக தொடர் தோல்வியை சந்தித்துக்கொண்டிருந்த பிரியதர்ஷனுக்கும் கூட காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் படமாக அமைந்தது..
இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் பிரியதர்ஷன் தமிழில் உதயநிதியை வைத்து, 'நிமிர்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இது மலையாளத்தில் வெற்றிபெற்ற 'மகேஷிண்டே' பிரதிகாரம் படத்தின் ரீமேக் ஆகும்.. இந்தப்படத்தை முடித்ததும் அடுத்ததாக மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் பிரியதர்ஷன். இந்தப்படம் ஐந்து மொழிகளில் தயாராக இருக்கிறதாம். தற்போது 'நிமிர்' படத்தை தயாரித்து வரும் சந்தோஷ் குருவிலா தான் இந்தப்படத்தை தயாரிக்க இருப்பதாக தனது பேஸ்புக் பக்கம் மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.