பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... |
மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் பி.சி.ஸ்ரீராம். தற்போது இந்தியில் அக்சய்குமார் நடிக்கும் பேடுமேன், தமிழில் கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
மேலும், இந்த படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் கல்யாண்ராமுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார் பி.ஸ்ரீ.ராம். இந்த படத்தை குணால் கோஹ்லி இயக்குகிறார். இந்த படத்தில் கல்யாண்ராமிற்கு ஜோடியாக நடிக்க புதுமுக நடிகை தேர்வு செய்து வந்துள்ளனர். ஆனால் அப்போது, இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதை கேள்விப்பட்டது, அவர் ஒளிப்பதிவு செய்யும் படத்தில் தான் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தாமாக முன்வந்து அந்த படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறாராம் தமன்னா. செப்டம்பர் 1-ந் தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்கும் படப்பிடிப்பில் தமன்னாவும் கலந்து கொள்கிறாராம்.