‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், அஆ என்ற தெலுங்கில் படத்தில் அறிமுகமானவர், பின்னர் பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து பிரபலமாகி விட்டார். அவர் நடித்த இரண்டு படங்களுமே ஹிட்டடித்ததால் இப்போது நான்கு தெலுங்கு படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தார் அனுபமா. தற்போது, மலையாளம், தமிழை விட தெலுங்கில் அடுத்தடுத்து கமிட்டாகி இப்போது ஒரே நேரத்தில் 4 படங்களை கைவசம் வைத்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
இவரைப்போலவே பிரேமம் சாய்பல்லவியும் பிடா தெலுங்கு படம் ஹிட்டடித்ததால் தற்போது நானியுடன் எம்சிஏ படத்தில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து வேறு சில படங்களிலும் நடிக்க பேசி வருகிறார். ஆக ஒரேநேரத்தில் பிரேம் பட நாயகிகள் இருவரும் தெலுங்கில் பிரபலமாகிவிட்டார்கள்.