‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளத்தில் சாய் பல்லவி அறிமுகமான பிரேமம் படம் அவரை தென்னிந்திய முழுவதும் பேச வைத்தது. அந்தவகையில், மலையாளத்தில் ஒரு ஹிட் படம் கொடுத்ததும் அந்த நடிகைகள் கோலிவுட் சினிமா இறக்குமதி செய்துவிடும். ஆனால் சாய்பல்லவி விசயத்தில் அது நடக்கவில்லை. அதே படம் தெலுங்கில் ரிமேக் ஆனபோதும் அவர் நடிக்கவில்லை. அவர் வேடத்தில் ஸ்ருதிஹாசன்தான் நடித்திருந்தார்.
அதையடுத்து தெலுங்கில் பிடா என்ற நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமானார் சாய் பல்லவி. இவருக்கு ஜோடியாக வருண் தேஜ் நடித்தார். சேகர் கம்முலா இயக்கிய இந்த படம் சமீபத்தில் வெளியாகி சாய் பல்லவிக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது. பிரேமம் படத்தில் நடித்த மலர் டீச்சர் வேடத்தைப்போலவே இந்த படத்தில் பானுமதி வேடத்தில் அவர் நடித்திருப்பதையும் இணையதளங்களில் ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். அதனால் உற்சாகத்தில் இருக்கிறார் சாய்பல்லவி. அதோடு, பிடா படக் குழுவினர் மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் தனது நன்றியை முகநூலில் தெரிவித்திருக்கிறார்.