‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்துள்ள 'சி.ஐ.ஏ' அதாவது 'காம்ரேட் இன் அமெரிக்கா' படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.. வரும் மே மாதம் 5ஆம் தேதி இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். மம்முட்டியை வைத்து 'பிக் பி' படம் மூலம் இயக்குனராக மாறிய அமல் நீரத், ஏற்கனவே 'குள்ளண்டே பார்யா' என்கிற குறும்படத்தில் துல்கரை வைத்து இயக்கியவர் தான், இப்போது இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தில் இதுநாள்வரை சாக்லேட் பாயாக பார்த்து வந்து துல்கர் முற்றிலும் புதிய பரிமாணத்திற்கு மாறி இருக்கிறார். ஆம். இதில் துல்கர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த புரட்சியாளராக நடித்திருக்கிறாராம்.. அதேநேரம், கம்யூனிசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் என்றாலும் இதன் பெரும்பகுதி காட்சிகள் வெளிநாட்டில் தான் எடுக்கப்பட்டு இருக்கின்றன. படத்தின் கதாநாயகியாக கார்த்திகா முரளிதரன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.