சீரியலை விட்டு விலகிய வீஜே விஷால் - காரணம் இதுதானா? | ஜெய் ஆகாஷ் உடன் ஜோடி சேரும் ரேஷ்மா | தலைப்புக்கு தணிக்கை குழு எதிர்ப்பு : 'வடக்கன்' பட ரிலீஸ் தள்ளிவைப்பு | யோகி பாபு நடிக்கும் 'வானவன்' | மலையாளத்தில் ரீமேக் ஆகும் 'ஆதார்' | பாயல்ராஜ் புத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் | சூரியின் மாற்றம் பிரமிக்க வைக்கிறது : விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் புகழாரம் | தனியார் தீவிற்கு ஹனிமூன் சென்ற ரகுல் ப்ரீத் சிங் | சாதாரண ஹோட்டலில் சாப்பிட்ட அல்லு அர்ஜுன் | விஜய் சேதுபதி - ராம் கோபால் வர்மா சந்திப்பு |
பாலிவுட்டில் வெளியான 'கல்லி பாய்' படத்தில் நடித்து புகழ் பெற்றவர் மல்லிகா சிங். ஜான்பாஸ் சிந்துபாத், ராதாகிருஷ், ஜெய் கன்கய்யா லால் கி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். எஸ்கேப் லைவ் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். சுனி இயக்கத்தில் வினய் ராஜ்குமார் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் மூலம் கன்னட சினிமாவுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் காஷ்மீர் பெண்ணாக நடிக்கிறார். மல்லிகா சிங் நடித்த இந்தி வெப் சீரீசான 'ராதா கிருஷ்' தொடர் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரபலமானது. இதன் மூலம் அவர் கன்னட மக்களுக்கு அறிமுகமானதால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. படத்திற்கு வீர் சமத் இசையமைக்கிறார். சபா ஒளிப்பதிவாளர். இது ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி.