நான் இறந்த பிறகும் என் பேர் சொல்லும் படம் : கருணாஸ் நெகிழ்ச்சி | ஓட்டளித்த கர்ப்பிணி தீபிகா படுகோனே | சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூரூ போதை பார்ட்டி | சென்னை ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையம் : இளையராஜாவுடன் இணைந்து தொடக்கம் | ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி |
தெலுங்கில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் படம் சர்க்காரு வாரி பாட்டா. வங்கி கடன்கள் சம்பந்தப்பட்ட கதைகள் உருவாகி வரும் இந்த படத்தை பரசுராம் இயக்க, தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 1ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது மகேஷ்பாபுவின் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருந்து வந்தார். அதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மகேஷ் பாபுவின் உடல்நலம் நன்றாக தேறி விட்டதால் ஜனவரி இறுதியில் மீண்டும் சர்க்காரு வாரி பாட்டா படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும் இப்படத்தின் முதல் பாடல் ஜனவரி இறுதியில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.