போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
அருந்ததி, ராணி ருத்ரம்மா தேவி போன்ற சரித்திர படங்களில் நடித்திருந்தபோதும் பாகுபலி படம் அனுஷ்காவின் கேரியரில் மிக முக்கியமான படம். அந்த படத்தில் முதல் பாகத்தில் அனுஷ்காவுக்கு கதையில் கூடுதல் முக்கியத்துவம் இல்லை. என்றபோதும், தற்போது உருவாகியுள்ள பாகுபலி-2வில் அவரது கதாபாத்திரமே பிரதானமாகியிருக்கிறதாம். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ரிலீஸ் தேதி ஏப்ரல் 28 என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது பாகுபலி-2 ட்ரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி ரசிகர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது.
மேலும், பாகுபலி-2வில் அப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் அனுஷ்கா நடித்த முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளை ட்ரெய்லரில் சேர்க்கவில்லை ராஜ மவுலி. காரணம், இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகப்படுத்தி நடித்த அனுஷ்காவினால் அதன்பிறகு பல மாதங்களாக கடும் டயட்ஸ், உடற்பயிற்சியில் ஈடுபட்டும் ஆரம்பத்தில் இருந்த உடல்கட்டுக்கு மாற முடியவில்லையாம். அதனால் வேறுவழியில்லாமல் வெயிட் போட்ட அனுஷ்காவை வைத்தே படப்பிடிப்பு நடத்தியுள்ளார் ராஜமவுலி.
ஆனால் அப்படியே படத்தை வெளியிட்டால் அனுஷ்காவின் கேரக்டர் அடிபடும், படமும் விமர்சனங்களை சந்திக்கும் என்று அச்சமடைந்த ராஜமவுலி, இறுதிகட்டத்தில் அனுஷ்கா நடித்த காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் அவரை ஸ்லிம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் கிராபிக்ஸ் வேலை களுக்கு அதிக காலஅவகாசம் ஆனது அனுஷ்காதான் காரணமாம்.