Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ராம்சரணை 'இட்லி' என அழைத்த ஷாருக்கான் : கொதிப்பில் ரசிகர்கள்

06 மார், 2024 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Shah-Rukh-Khan-calls-Ramcharan-as-Itli:-Fans-are-furious

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதை முன்னிட்டு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் சமீபத்தில் தொடங்கின. இதில் பாலிவுட்டில் இருந்து, தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டனர். அதேசமயம் முதல் நாள் நிகழ்வின் போது நடிகர் ரஜினிகாந்த் தங்களுடன் வந்த தங்கள் வீட்டு பணிப்பெண்ணை புகைப்படம் எடுக்கும் போது ஒதுங்கி நிற்கச் சொல்லி சைகை காட்டினார் என ஒரு வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. சிலர் இது குறித்து கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர்.

இதை தொடர்ந்து இரண்டாவது நாள் கொண்டாட்டங்களில் பாலிவுட் மும்மூர்த்திகளான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகியோர் ஒன்றாக மேடையேறி ஆர்ஆர்ஆர் படத்தில் புகழ்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஒன்றாக இணைந்து நடனம் ஆடினர். அந்த சமயத்தில் படத்தில் நிஜமாகவே ஆடிய ராம்சரண் கூட இருந்ததால் நன்றாக இருக்கும் நினைத்த ஷாருக்கான் தன்னிடமிருந்து மைக்கில் ராம்சரண் எங்கப்பா இருக்கிற, மேடைக்கு வாங்க என்று அழைத்த போது அவரை இட்லி சாப்பிடுபவர் எனக் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

பொதுவாக தென்னிந்தியாவை சேர்ந்தவர்களை மதராஸி, இல்லை என்றால் இட்லி, சாம்பார் சாப்பிடுபவர்கள் என்பது போன்றே கேலியுடன் வடநாட்டவர் குறிப்பிடுவது வழக்கம் தான். ஆனால் ஷாருக்கான் போன்ற ஒரு நடிகர் தென்னிந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ராம்சரணை இப்படி பொது மேடையில் கிண்டலாக அழைத்ததை அவரது ரசிகர்கள் ரசிக்கவில்லை. ராம் சரணின் பர்சனல் மேக்கப்மேன் முதற்கொண்டு பலரும் ஷாருக்கானின் இந்த செயலுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பரபரப்பை கிளப்பும் வீர் சாவர்க்கர் டிரைலர்பரபரப்பை கிளப்பும் வீர் சாவர்க்கர் ... ஹிந்தி சினிமா மலையாள படங்களின் பின்னால் வெகு தூரத்தில் இருக்கிறது : அனுராக் காஷ்யப் ஹிந்தி சினிமா மலையாள படங்களின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Paraman - Madras,யூ.எஸ்.ஏ
08 மார், 2024 - 14:31 Report Abuse
Paraman நானா இருந்தா என்னங்கடா ''பான் பராக் வாயனுகளா'' என்று பதில் சொல்லி இருந்திருப்பேன் இல்லைனா ''பாவ் பாஜி வாயனுகளா'' என்றும் சொல்லியிருப்பேன்
Rate this:
Karthi Natraj - chennai,இந்தியா
08 மார், 2024 - 11:31 Report Abuse
Karthi Natraj ஓகே சாம்பார் னு சொல்லணும் சாம்பர சாப்பிட சொன்ன குடிக்கிறாங்க
Rate this:
இளந்திரையன் வேலந்தாவளம் பதிலுக்கு சப்பாத்தி னு பதிலடி கொடுத்திருக்கணும்...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07 மார், 2024 - 05:38 Report Abuse
NicoleThomson ஜாப்ப்பர் சாதிக் போன்ற மகனை பெற்றெடுத்த ஷாருக்கு இனி தன மகனை மெத்து என்று கூப்பிடுவாரா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in