'ரசவாதி'யில் சித்த வைத்தியர் கேரக்டரை உருவாக்கியது ஏன்? : சாந்தகுமார் பேட்டி | படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா |
கடந்த ஆண்டு வெளியான மலையாளப் படம் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே'. சதாரணமாக வெளியாகி அசாதாரணமான சாதனை படைத்த படம். சுமார் 5 கோடியில் உருவான படம் 50 கோடிக்கு மேல் வசூலித்தது. கணவனின் கொடுமை தாங்க முடியாத மனைவி ஒரு நாள் சிங்கமென எதிர்த்து நின்றால் என்ன ஆகும் என்பதுதான் படத்தின் கதை.
விபின் தாஸ் இயக்கத்தில் பசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன், அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்த இப்படதிற்கு அங்கிட் மேனன் இசையமைத்திருந்தார். ஓடிடி வெளியீட்டின் மூலம் பலதரப்பு ரசிகர்களை சென்றடைந்த இந்த படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய ஆமீர்கான் முடிவு செய்திருக்கிறார்.
மலையாளத்தில் படத்தை இயக்கிய விபின் தாஸே ஹிந்தியில் இயக்குகிறார். மேலும், தர்ஷனா ராஜேந்திரன் நடித்த கேரக்டரில் 'தங்கல்' பட புகழ் நடிகையும், தற்போது ஆமீர்கானுக்கு நெருக்கமான தோழியாக இருப்பவருமான பாத்திமா சனா ஷேக் நடிக்கிறார். இதுபற்றிய முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.