தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! |
பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாமுக்கு எப்போதுமே தென்னிந்திய மொழி படங்களில், குறிப்பாக மலையாள படங்கள் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. ஜேஏ என்டர்டெய்ன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வரும் ஜான் ஆப்ரஹாம், கடந்த வருடம் மலையாளத்தில் வெற்றிபெற்ற அய்யப்பனும் கோஷியும் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றினார். இதில் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் அவரே நடிக்கவும் உள்ளார்.
இது ஒருபக்கம் இருக்க தற்போது ஒருபடி மேலேபோய் மலையாளத்தில் நேரடியாக ஒரு படம் தயாரிக்கும் வேலையிலும் இறங்கிவிட்டார் ஜான் ஆப்ரஹாம். இந்தப்படத்திற்கு மைக் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது. தண்ணீர் மாத்தன் தினங்கள் படத்தில் அறிமுகமாகி கவனம் ஈர்த்த அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்க, ரஞ்சித் சஜீவ் கதாநாயகனாக நடிக்கிறார். விஷ்ணு சிவபிரசாத் இந்தப்படத்தை இயக்குகிறார்.