ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் ரஜினிகாந்த்
இயக்குனரின் மறைவு திரையுலகிற்கு பெரிய இழப்பு, அவர் எனக்கு குரு மட்டுமல்ல அப்பா மாதிரி. அப்படித்தான் என்னை கடைசிவரை பார்த்தார். ஒரு நடிகனாக எப்போதும் என்னை பார்த்ததில்லை. என் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருந்தார். அவரை இழந்தது என்னை நானே இழந்த மாதிரி உணர்கிறேன். இன்னொரு கே.பி.சாரை திரையுலகில் பார்க்கவே முடியாது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இயக்குனர் ஷங்கர்
மறைந்த இயக்குநர் பாலச்சந்தர், சிறந்த இயக்குநர், தற்போது உள்ள இயக்குனர்களுக்கு இன்ஸ்பிரேசனாக அவர் விளங்கியவர். அவரின் மறைவு ஈடு செய்ய முடியாதது.
திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் : செல்வமணி
மறைந்த இயக்குநர் பாலச்சந்தரின் இறுதி ஊர்வலம், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் நடத்த அவரது குடும்பத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக சங்க தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார். விரைவில், பிரமாண்ட நினைவஞ்சலி நடத்தவும் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
குட்டிபத்மினி
நான் (குட்டிபத்மினி) 1965ல் தேசிய விருது வாங்கினேன். என்னிடம் பாலச்சந்தர், ஏன்டி, எனக்கு முன்னாடியே,நீ தேசிய விருது வாங்கி்ட்டியே? என்று என்னைப் பார்க்கும்போதெல்லாம் தவறாது கேட்பார். அவரின் மறைவு, மிகுந்த வருத்தமளிக்கிறது.
விமலாராமன்