‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழில், 'ஜில்லா' படத்தில் விஜய், கன்னடத்தில் மைத்திரி படத்தில் புனித் ராஜ்குமார் ஆகியோரைத் தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் டோலிவுட்டின் முன்னணி நடிகருடன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. டோலிவுட்டின் யங் டைகர் என ரசிகர்கள் கொண்டாடும் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவிருக்கும் படத்தில் அவருடன் முக்கிய வேடத்தில் நடிக்க மோகன்லால் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கவிருக்கும் படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மைதிரி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜுனியர் என்.டி.ஆர் தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கும் நன்னுக்கு பிரேமதோ படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் ஜுனியர் என்.டி.ஆர் மோகன்லாலுடன் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்த் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.