Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
கஸ்தூரி ட்வீட்ஸ்
07 பிப், 2018 - 12:35 IST
எழுத்தின் அளவு:

மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு மிக அழகிய முறையில், கண்ணியமாக கலாரசனையுடன் புதுமையாக சுடிதார் அலங்காரம் செய்வித்த இரு குருக்களை பணி நீக்கம் செய்திருப்பது நியாயமற்ற பழமைவாதம். திருவாடுதுறை ஆதீனம் இருவரையும் மீண்டும் பாராட்டி பணியில் அமர்த்தவேண்டும்.

கண்ணப்ப நாயனாரின்  எச்சிலையும் ஆண்டாளின்  சூடிக்கொடுத்த மாலைகளையும்  போற்றும் நாம், தற்காலத்தில் ஒருவரின் பக்தியை குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளக்கூடாதா? தன் குழந்தையாக பாவித்து விதம்விதமாக அலங்காரம் செய்து மகிழ்ந்த ஒரு பக்தரை புரிந்துக்கொள்ளக்கூடாதா?

மின்விளக்கு, எலக்ட்ரிக் மேளம், AC, ஒலிபெருக்கி, இது எதுவும் ஆகம கேடு இல்லை. ஒரு வித்தியாச அலங்காரத்தில் தான் ஆகமத்துக்கு ஆபத்தா? குளிக்காமல், ஏன், குடித்துவிட்டுக்கூட சிலர் வருகிறார்கள். எல்லாவிதமான ஆடையிலும் வருகிறார்கள். ஆனால் அம்மனுக்கு ஆடைக்கட்டுப்பாடா?

மேலும் : கஸ்தூரி ட்வீட்ஸ்

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff-2018
    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in