தேனியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகி வரும் புதிய படம் கிழக்கு பார்த்த வீடு. பிரபா என்பவர் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக தமலி நடிக்கிறார். திருடன் ஒருவனுக்கும் பள்ளி மாணவிக்கும் இடையே காதல் மலர்கிறது. அதற்கு எதிர்ப்பு கிளம்ப இருவரும் எடுத்த முடிவு அதிர்ச்சியானது. இதுதான் படத்தின் கதை. தேனியில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தை இயக்கி வருகிறார் பாலகுருசாமி.