அசோக்கேணி தயாரிக்க, ஏ.கே.கே.எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் தமிழ், தெலுங்கு, கன்னடம், என மூன்று மொழிகளில் தயாரிக்கும் படம் "பிரசாத்". இந்தபடத்தில் அர்ஜூன் கதாநாயகனாக நடிக்கிறார். இது அவர் நடிக்கும் 150வது படமாகும். கதாநாயகியாக மாதுரி பட்டாச்சார்யா நடிக்கிறார். இவர்களுடன் ராமகிருஷ்ணா, சமா கிருஷ்ணா, சைலஜா சோமசேகர், ரமேஷ்பட் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சங்கல்ப் என்ற காது கேட்காத, வாய்பேச முடியாத சிறுவன் நடித்திருக்கிறார்.
சாதாரண மெக்கானிக்கான அர்ஜூன் ஒரு ஆண் குழந்தை பிறந்தால், வளர்ந்து ஆளாகி நமது கஷ்டத்தை எல்லாம் போக்கி விடுவான் என்று கனவுகளோடு இருக்கிறார். அவரது ஆசைப்படியே மகன் பிறப்பான். பிறந்த குழந்தை வாய்பேச முடியாத, காது கேட்காத குழந்தைகயாக பிறந்து விடுகிறது. அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பது சென்டிமென்ட் கதையோட்டம்.
பொதுவாக சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் அர்ஜூனுக்கு, இந்தப்படத்தில் துளியளவு கூட ஆக்ஷ்ன் கிடையாது. டூயட்டும் கிடையாது. அப்படியொரு வித்தியாசமான கதையை அமைத்து, இயக்கி இருக்கிறார் மனோஜ் சதி. இளையராஜா இசையமைக்க, சஞ்சய் மால்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார்