தாய்மண் திரையகம் சார்பில் தயாரிக்கும் முதல்படம் மயங்கினேன் தயங்கினேன். மனநலவிடுதியில் நடக்கும் பாலியல் வன்முறையை வெளிச்சத்துக்கு கொண்டு வர படமாக உருவாக்கி வருகிறார் இன்பா படத்தை இயக்கிய எஸ்.டி.வேந்தன். சமூக அவலத்தை தோலுரிக்கும் படமாக உருவாகி வரும் இப்படத்தில் நிதின் சத்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி தமிழ்ப் படம் புகழ் திஷா பாண்டே. இன்னொரு நாயகனாக தருண் சத்ரியா நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, புதுமுகம் பாலா, தேஜாஸ்ரீ, அஜய் ரத்னம், டிபி கஜேந்திரன் என நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. ரேணிகுண்டாவில் நடித்த சஞ்சனா சிங் ஒரு அட்டகாசமான குத்துப் பாடலுக்கு ஆடியுள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இப்படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.