ஜே.எஸ்.வி.சினிமாஸ் என்ற புதிய படநிறுவனம் தங்களது முதல் படைப்பாக அரிதாரம் என்ற படத்தினை தயாரித்து வருகிறது. கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் மூன்று பேர் எந்தவித ஆதரவும் இல்லாமல், யாருடைய வழிகாட்டுதலும் கிடைக்காமல் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடும் இவர்கள் வாழ்க்கையில் வயதான பாட்டி ஒருவரை சந்திக்கின்றனர். அந்தபாட்டியால் இவர்கள் படும் அவஸ்தையும், அதிலிருந்து மீள்வதற்காக நடத்து போராட்டமும் தான் படத்தின் கதை.
பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஆர்.டி.அலெக்சாண்டர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். படத்தின் நாயகனாக தமிழ் என்பவரும், நாயகியாக ஸ்ரீவிஜயா என்ற புதுமுகங்கள் நடிக்க இவர்களுடன் சங்கீத், கிருஷ்ணா, நெல்லைசிவா, மைனர்நாகு, விஜயாபாட்டி, இளங்கோ, பொரிகுமார், புல்லட்ஜான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரூபேஷ்ராம் இசையமைக்க, ஆர்.வி.கேசவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜே.எஸ்.வி.சினிமாஸ் சார்பில் கே.ஜே.சக்திவாசகம் தயாரிக்கிறார்.
இப்படத்தின் சூட்டிங் சென்னை, குளித்தலை, பெட்டவாய்த்தலை, மேலூர் உள்ளிட்ட இடங்களில் படமாக்கியுள்ளனர். ஆகஸ்ட் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.