Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

இதுதான்டா போலீஸ்-2

இதுதான்டா போலீஸ்-2,Ithuthanda police-2
  • இதுதான்டா போலீஸ்-2
  • ராஜசேகர்
  • மதுரிமா
  • இயக்குனர்: ஜீவிதா
09 ஜூன், 2011 - 19:04 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » இதுதான்டா போலீஸ்-2

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு போலீசை தலை நிமர செய்த படம் "இதுதான்டா போலீஸ்". டாக்டர் ராஜசேகர் நடிப்பில் வெளிவந்து வசூலில் சாதனை செய்த இந்த அதிரடிபடம், இப்போது மீண்டும் ராஜசேகர் நடிப்பில், "இதுதான்டா போலீஸ் - 2" பெயரில் உருவாகி வருகிறது.

போலீஸ் அதிகாரிகளை அரசியல்வாதிகள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். பல இடங்களில் அதிகாரத்தில் உள்ளவர்கள் பழிபோடவே போலீஸ் துறை பயன்படுகிறது. இந்தச்சூழழில் ஒரு சின்சியர் போலீஸ் எப்படி நடந்து கொள்கிறார்? அநீதியை எதிர்த்து எப்படி போராடுகிறார் என்பது தான் படத்தின் கதை.

இதுதான்டா போலீஸில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்ற டாக்டர் ராஜசேகரே இந்தபடத்திலும் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மதுரீமா என்பவர் நடிக்கிறார். டாக்டர் ராஜசேகரின் மனைவி ஜீவிதா இப்படத்தை இயக்குகிறார். அரவிந்த் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.சின்னா இசையமைக்கிறார். ரைட்டர் மோகன் வசனம் எழுதியுள்ளார். ஆண்டாள் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆண்டாள் வரதராஜன் தயாரிக்கிறார். இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap