Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

சிங்கராஜா

சிங்கராஜா,
  • சிங்கராஜா
  • மனோஜ் அலுங்கல்
  • வர்ஷா
  • இயக்குனர்: சுனில் ராஜ்
06 ஆக, 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » சிங்கராஜா

அக்னா இண்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படம் சிங்கராஜா. கதாநாயகனாக மனோஜ் அலுங்கல் அறிமுகம் ஆகிறார். கதாநாயகிகளாக வர்ஷா, ஜீனத் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் மனோரமா, தேவன், கலாபவன்மணி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஜமீன்தார்களால் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களின் மதிப்பு, பல வருடங்களுக்குப்பின் பன்மடங்காக உயர்கிறது. ஜமீன்தார்களின் வாரிசுகள் அந்த இடத்தை காலி செய்துவிட்டு வெளியேறும்படி, ஏழை மக்களை துன்புறுத்துகிறார்கள். வயது பெண்களை கடத்துவோம் என்றும், குடிசைகளை எரித்து விடுவோம் என்றும் எச்சரிக்கிறார்கள்.

பயந்துபோன ஏழை மக்கள் முன்பு ஆண்டவன் போல் வந்து நிற்கிறான், துடிப்பு மிக்க ஒரு இளைஞன். தன்னை காவல் துறை அதிகாரி என்றும், வருமானவரி அதிகாரி என்றும் கூறி, ஜமீன்தார்களின் வீடு புகுந்து கொள்ளையடிக்கிறான். அந்த பணத்தில், பல ஏக்கரில் இடம் வாங்கி, ஏழை மக்களை குடிவைக்கிறான். இதுதான் சிங்கராஜாவின் கதை.

படத்திற்கு சிரஞ்சீவி ஒளிப்பதிவு செய்ய, சிவாஜி ராஜா இசையமைக்கிறார். சுனில் ராஜ் இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு: மனோஜ் அலுங்கல்.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in