லோக்கல் போலீஸாக நடித்திருக்கும் சத்யராஜ் முதல் முறையாக சிபிஐ அதிகாரியாக நடிக்கும் படம் சினம். படத்தின் பெயருக்கேற்ப இதுவொரு க்ரைம் த்ரில்லராக உருவாகிறது. ஒரு பாரில் நடக்கும் கொலையை துப்பறிகிறார் சத்யராஜ். அந்த விசாரணையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள்தான் கதை. படத்தில் நவ்தீப், பூமிகா ஆகியோரும் உண்டு. படப்பிடிப்பு முழுக்க தாய்லாந்தில் நடக்கிறது.
அருண் பிரசாத் படத்தை இயக்குகிறார். இசை மணிசர்மா, ஒளிப்பதிவு கே.தரன். எம்.ஜி.ஆரின் ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதுதான் சுகம் பாடலை சினத்துக்காக ரீமிக்ஸ் செய்திருக்கிறார் மணிசர்மா. சத்யராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். வாத்தியாரின் பாடலுக்கு ஆட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் விருப்பம். அதை இந்தப் படத்தில் தீர்த்துக் கொண்டிருக்கிறார் என்று டைரக்டர் அருண் பிரசாத் கூறினார்.