வெங்கடேஸ்வரா கிருபா எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக உதய்.கே.மேத்தா தயாரிக்கும் படம் “ முரட்டு கைதி “ கன்னடத்தில் சுதீப் நடித்து வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் “ பச்சன் “ கர்நாடகாவில் மாபெரும் வசூல் சாதனை செய்த படம் இது. பச்சன் படத்தையே தமிழில் முரட்டு கைதி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப் படுகிறது.
நான் ஈ படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சுதீப் மேலும் நட்சத்திர அந்தஸ்தை பச்சன் படத்தின் மூலம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாவனா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர், ஜெகபதிபாபு, பிரதீப்ராவத், ரவிசங்கர், ஆசிஷ்வித்யார்த்தி, பாருல்யாதவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை - ஹரிகிருஷ்ணா
ஒளிப்பதிவு - சேகர் சந்துரு
எடிட்டிங் - அருண்சாகர்
எழுதி இயக்குபவர் ஷஷாங்க்.
அதிரடி ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்தை தமிழ்நாடு முழுக்க கோவை வேல் பிலிம்ஸ் வெளியிட உள்ளது.