கிராமத்து கதைகளில் நடித்து வந்த விதார்த் முதன் முறையாக தமிழ் மலையாள மொழிகளில் தயாராகும் அருத்தாபத்தி படத்தின் மூலம் மல்லுவுட்டுக்கு செல்கிறார். அருத்தாபத்தி என்றால் சொன்ன சொல்லில் இருந்து சொல்லாத பொருளை விளங்க வைப்பதை குறிக்கும் சங்க இலக்கிய வார்த்தையாம். மலையாளத்திலும் இதே பொருள்தானாம். விதார்த் ஜோடியாக ஐஸ்வர்யா தத் என்பவர் அறிமுகமாகிறார். தம்பி ராமையா, தேவதர்ஷினி, ஆதிரா ஆகியோரும் நடிக்கிறார்கள். மலையாள இயக்குனர் வினயனின் உதவியாளர் சஜீன் வர்க்கீஸ் டைரக்ட் செய்கிறார். ஜாசிகிப்ட் மியூசிக், நவாஸ் கேமராமேன்.