இயக்குனர் சரணிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனுபவத்துடன் வெங்கட் இயக்கும் படம் கதிர்வேல். பிப்ரவரி 14, அஞ்சாதே படங்களில் நடித்துள்ள அஜ்மல்தான் படத்தின் நாயகன். அவருக்கு ஜோடியாக காதலில் விழுந்தேன் பட நாயகி சுனேனா நடிக்கிறார்.
மறைந்த இசையமைப்பாளர் ரவீந்திரனின் மகன் விஜய் மாதவ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். காதலும் ஆக்ஷனும் கலந்த இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் வெங்கட்.
கதிர்வேல் படத்தின் இன்னொரு ஹைலைட் நடிகை கஸ்தூரியின் குத்தாட்டம். ஒரு காலத்தில் இழுத்து போர்த்திக் கொண்டு குடும்பப்பாங்கான தோற்றத்தில் நடித்த நடிகை கஸ்தூரி வயதாகி விட்டதால் இப்போது பீல்டு அவுட் ஆகி வாய்ப்புக்காக அலைந்து திரிந்து வருகிறார். அவரை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த கதிர்வேல் குழுவினர், அம்மணியை ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட வருமாறு கேட்டுள்ளனர். முதலில் யோசித்த கஸ்தூரி.. பின்னர் இது ஒரு நல்ல ரீ எண்ட்ரீயாக இருக்கும் என ஒத்துக் கொண்டாராம்.
- தினமலர் சினி டீம் -