ஆந்திரத்து யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, சமந்தா இணைந்து நடித்த படம் "துக்குடு". தெலுங்கில் ஹிட் அடித்த அதிரடி ஆக்ஷன் படம். அதனை இப்போது தமிழில் டப் செய்து "அதிரடி வேட்டை" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சந்தோஷமான நடுத்தர குடும்பத்திற்குள் நுழைகிறது ஒரு தாதா கும்பல், அம்மா அப்பா, தங்கை என்று அன்பு உலகத்தில் இருந்த ஹீரோ அரிவாள், துப்பாக்கி என்று ஆக்ஷன் அவதாரம் எடுத்து வேட்டையாடும் கதை. சீனு வைத்தலா இயக்கி உள்ளார். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரா தமிழ் வசனங்களை எழுதி உள்ளார். நா.முத்துகுமார் பாடல்களை எழுதியுள்ளார். தமன் இசை அமைத்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்ட தமிழ் முகங்களும் உண்டு.