மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி போன்று 1940களில் திருநெல்வேலி பகுதியில் வாழ்ந்த வில்லேஜ் தாதா வீரன் முத்து. அவனது கதையை இப்போது "வீரன் முத்து ராக்கு" என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கிறார்கள். வெளுத்துக்கட்டு படத்தில் அறிமுகமான கதிர், வீரன் முத்துவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி லியாஸ்ரீ. கோபால கிருஷ்ணன் இசையையும், பாஸ்கர் ஒளிப்பதிவையும் கவனித்துக் கொள்கிறார்கள்.
படத்தை இயக்கும் ராஜசேகரன் கூறியதாவது: வீரன் முத்து கதை தென் மாவட்டங்களில் செவி வழி பாடல்களாகத்தான் உள்ளது. அதனை திரைக்கதையாக மாற்றி இருக்கிறோம். அவன் சிலம்பாட்ட வீரன். அதனால் ஹீரோ கதிர் சிலம்பு கற்று நடித்து வருகிறார். அவனுக்கும் ராக்கு என்ற பெண்ணுக்கும் இடையே உள்ள காதலையும் சொல்வதால் படத்துக்கு "வீரன் முத்து ராக்கு" என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றார்.