விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் | 8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் |
வளர்ந்து வரும் சின்னத்திரை நடிகர் அசீம். வாணி போஜனுடன் மாயா என்ற சீரியலின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பகல் நிலவு, பிரியமானவள், தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
பகல் நிலவு சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த ஷிவானியை அவர் தீவிரமாக காதலித்து வருவதாக கூறப்பட்டது. அசீம் ஏற்கெனவே திருமணமானவர் என்பதால் ஷிவானியுடனான காதலுக்காக மனைவியை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில் அசீம் தனது மனைவி சையத் சோயாவை சட்டப்படி விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அசீம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். எங்கள் இரு தரப்பிலும் பரஸ்பர ஒப்புதலுடன் நீதிமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டேன் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தயவு செய்து எனது திருமண நிலை குறித்து எந்தவொரு தனிப்பட்ட கேள்விகளையும் கேட்க வேண்டாம். என பதிவிட்டுள்ளார்.