சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா என்ற பாடல்வரி ஒரு படத்தின் தலைப்பில் இருந்து பச்சை குழந்தைகளின் மழலை வார்த்தை வரை ஊடுருவிவிட்டது. இப்போது இந்த நெருப்புடாவை சிரிப்புடா என்று மாற்றி விஜய் டி.வியில் புதிய காமெடி நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
இதில் விஜய் டி.வியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஈரோடு மகேஷ் மற்றும் தாடி பாலாஜி இணைந்து நடத்துகிறார்கள். பிரபலமான திரைப்படங்களில் வரும் ஹீரோவின் ஸ்டைல்கள் பன்ஞ் டயலாக்குகள், ஆக்ஷன் காட்சிகளை நையாண்டி செய்வதுதான் இந்த நிகழ்ச்சியின் கரு. முதல் நிகழ்ச்சியாக அவர்கள் நையாண்டி செய்வது கபாலியைத்தான்.
இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வருகிற 29ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது.




