2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

எதிர்நீச்சல் தொடரில் ஜனனியாக நடித்த மதுமிதாவும், நிவாசினியாக நடித்த வைஷ்ணவி நாயக்கும் உயிர்த்தோழிகள் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்ததே. இருவரும் ஒன்றாக சேர்ந்து பல லூட்டிகள் அடித்து இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்துள்ளனர். தற்போது எதிர்நீச்சல் தொடர் முடிந்துவிட்ட நிலையில் ரீயூனியனில் அனைவரும் ஒன்றாக சந்தித்துள்ளனர். அப்போது மதுமிதாவும் வைஷ்ணவியும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மதுமிதா தன் இலையில் சாப்பிடாமல் வைத்த பிரியாணி பீஸ்களை வைஷ்ணவியின் இலையில் எடுத்து வைக்கிறார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மதுமிதா அதில் 'உங்கள் உணவுக்கான மனித குப்பைத் தொட்டியை டேக் செய்யுங்கள்' என்று தனது உயிர்த்தோழியையே கலாய்த்துள்ளார். இருந்தாலும் ஜனனிக்கு இவ்வளவு குசும்பு ஆகாது.