‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை |
வீஜே பார்வதி அடிக்கடி எங்கேயாவது டூர் சென்று வீடியோக்களை பதிவிடுவார். இம்முறை அவர் தனது அம்மாவை ஊர்சுற்ற கூட்டி சென்றுள்ளார். அம்மாவிற்கு பெஸ்ட் ரிட்டர்யர்ட்மெண்ட் லைப் கொடுக்கும் வகையில் திருவண்ணாமலையில் ஒரு பிரபல ரிசாட்டிற்கு அம்மாவுடன் சென்று தங்கியுள்ளார். அங்கே வீஜே பார்வதி அம்மாவுடன் சேர்ந்து பல ஆக்டிவிட்டிகள், விளையாட்டுகள் என எஞ்சாய் செய்ததை ஒரு ஷார்ட் வீடியோவாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். தனது தந்தை இறப்பதற்கு முன் அம்மாவை கூட்டிச் செல்ல விரும்பிய இடம் திருவண்ணாமலை என்றும், அந்த ஆசையை தற்போது தான் நிறைவேற்றிவிட்டதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். மேலும், இருக்கும் கொஞ்ச காலத்திலேயே அம்மா அப்பாவுடன் நேரத்தை செலவழியுங்கள். அவர்கள் இல்லாத போதுதான் அவர்கள் அருமை நமக்கு புரியும். எனவே இருக்கும் போதே பெற்றோர்களுடன் சேர்ந்து செலிபிரேட் பண்ணலாம் என அட்வைஸூம் செய்துள்ளார். வீஜே பார்வதியின் இந்த வீடியோ உண்மையில் பெற்றோர் பற்றிய கருத்துக்கா? அல்லது அந்த ரிசார்ட்டின் விளம்பரத்துக்கா? என தெரியாமல் ரசிகர்களே மண்டையை பிய்த்துக்கொண்டு அவரிடம் கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.