10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

தமிழ் சினிமாவில் நடிகை ' நிக்கி கல்ராணி 'டார்லிங்' படத்தின் முலம் அறிமுகமானார். பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகத நாணயம், கலகலப்பு 2 ,சார்லி சாப்லின் 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நிக்கி கல்ராணி சில வருடங்களாக நடிகர் ஆதியை காதலித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது .
இந்நிலையில் திருமணத்தை முடித்த ஒரு சில நாட்களிலேயே சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் நிக்கி கல்ராணி கலந்து கொள்ள இருக்கிறார். வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி முதல் கலர்ஸ் தமிழில் 'வெல்லும் திறமை' என்ற புதிய நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவராக நிக்கி கல்ராணி கலந்துக்கொள்ள உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.