'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
ஜீ தமிழ் டிவி துவக்கத்திலிருந்தே தமது நேயர்களுக்கு பொழுதுபோக்கு நிறைந்த பொருத்தமான நிகழ்ச்சிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து பல சுவாரஸ்யமான கற்பனை தொடர்களையும், நிஜம் சார்ந்த அற்புதமான நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஜோக்கர் போக்கர் என்ற காமெடி நிகழ்ச்சியை ஞாயிறு தோறும் மதியம் 2 மணிக்கு ஜீ தமிழ் ஒளிபரப்பவுள்ளது.
கேளிக்கை நிறைந்த இந்த நிகழ்ச்சியில் வெறும் நகைச்சுவை மட்டுமில்லாமல், சில சுவாரஸ்யம் நிறைந்த விளையாட்டுகளும் உள்ளன. ஒவ்வொரு வாரமும் 4 பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக இரண்டு சிரிப்பூட்டும் அணிகளாக போட்டியிடுவார்கள். ஒரு மெகா பரிசுத்தொகைக்காக நான்கு சவாலான சுற்றுகளில் அவர்கள் மோதுவார்கள். பணத்தை ஊதும் மிஷினுக்குள் போட்டியாளர்களை அனுப்புவது, வயிறு குலுங்க சிரிக்க வைக்கப்போகும் காமெடியன் யார் என பந்தையம் கட்டுவது, ஒரு பெட்டிக்குள் என்ன உள்ளது என்பதை கண்டுபிடிக்கும் விளையாட்டு, என பல சுவாரஸ்யமான பகுதிகளின் மூலம் நேயர்களை இந்த நிகழ்ச்சி நிச்சயமாக கவரும்.
பிரபல நகைச்சுவை விஜே பப்பு மற்றும் நடிகை சஷ்டிக்கா தொகுத்து வழங்கும் இந்த ஜோக்கர் போக்கர், உங்களது குடும்பத்தின் மொத்த பொழுதுபோக்கு தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரே நிகழ்ச்சியாக இருக்கும். குடும்பத்துடன் மனம் விட்டு சிரித்து மகிழ ஜீ தமிழில் ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 2 மணிக்கு ஜோக்கர் போக்கர் நிகழ்ச்சியை காணத்தவராதீர்கள்.