ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
சின்னத்திரை நடிகையான வீணா வெங்கடேஷ், அவர் நடித்து வந்த இரண்டு சீரியல்களிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதையடுத்து கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகை வீணா வெங்கடேஷ் சித்தி 2 சீரியலிலும், விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் விஜய் டிவி சீரியலில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் வேறொருவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் சித்தி 2 சீரியலிலிருந்தும் வீணா வெங்கடேஷை கழட்டி விட்டுள்ளனர்.
இது குறித்து பேசியுள்ள வீணா வெங்கடேஷ், 'சித்தி 2-வில் சுப்புலெட்சுமியாகவும், காற்றுக்கென்ன வேலி சீரியலில் மீனாட்சியாகவும் இரண்டு அருமையான கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். இந்த இரண்டு சீரியல்களும் எனக்கு குடும்பம் போல இருந்தது. ஆனால், திடீரென எனக்கு கொரோனா வந்து விட்டது. சீரியல் குழுவினர் எனக்காக கொஞ்சகாலம் காத்திருந்தார்கள். ஆனால், எனக்கு டெஸ்ட் முடிய இன்னும் இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. இந்த இரண்டு நாட்கள் மட்டும் அவர்கள் காத்திருந்தால் நான் மீண்டும் சீரியலில் நடிக்க வந்திருப்பேன். ஆனால், அவர்கள் எனக்கு பதில் வேறு நடிகர்களை மாற்றிவிட்டார்கள். அந்த இரண்டு தொடர்களையும் நான் மிகவும் மிஸ் செய்கிறேன். நிச்சயமாக புது புராஜெக்டில் மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன்' என உருக்கமாக பேசியுள்ளார்.